சென்னை ஆக, 26
அரசு பள்ளிகளில் செய்ய வேண்டிய தற்காலிக பராமரிப்பு பணி குறித்த விபரங்களை சமர்ப்பிக்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளி கட்டடங்கள் 100% உறுதியுடன் உள்ளதா என்பதை ஆராய்வதுடன், பராமரிப்பு பணி தேவைப்படும் வகுப்பறை கட்டிடங்களின் விபரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலை இரண்டு வாரத்தில் அனுப்பவும் அனைத்து பள்ளிகளுக்கும் தொடக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.