சென்னை ஆக, 23
ஆன்லைன் மூலம் பட்டா பெற செல்போன் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிலம் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெரும் வகையில் இ சர்வீசஸ் தளம் செயல்பாட்டில் உள்ளது. இதிலிருந்து இலவசமாக பெரும் ஆவணங்களை சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து பட்டா, சிட்டா, பட்டா நகல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற செல்போன் எண் கட்டாயமாக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வருகிறது.