சென்னை ஆக, 23
தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் 9. 74 லட்சம் கோடி அளவிற்கு தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்திருப்பதாக தமிழக அரசு கூறுவதாக தெரிவித்துள்ளார். அதன் தற்போதைய நிலை என்ன எனவும் வினவியுள்ளார். எவ்வளவு முதலீடு வந்துள்ளது! இன்னும் எவ்வளவு வர வேண்டி உள்ளது என்பது குறித்து அறிக்கை வெளியிடவும் அன்புமணி கோரி உள்ளார்.