ராமநாதபுரம் ஆக, 21
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட வடக்குத்தெரு பிரதான சாலையின் கழிவு நீர் வாறுகால் மீது சிலர் கான்கிரீட் கட்டிடங்களை கட்டியுள்ளனர்.
நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடுகளின் சுற்றுச்சுவர், காம்பவுண்ட், வானுயர்ந்த அடுக்குமாடி படிக்கட்டுகள் என தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் புகார் செய்ததின் அடிப்படையில் கீழக்கரை நகராட்சி நிர்வாகமும் வருவாய்துறையும் இணைந்து ஆக்கிரமிப்பு கட்டிட பகுதிகளை இடித்து தள்ளினர்.
இதேபோன்று பல்வேறு தெருக்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாசல்படிகள், காம்பவுண்டுகள் என நகராட்சி இடத்தில் கட்டி வைத்துள்ளனர். இதனையும் பாரபட்சமின்றி இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.நகராட்சி நிர்வாகம் என்ன செய்ய போகிறது? காத்திருப்போம்!
கீழை ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்