சென்னை ஆக, 19
MBBS,BDS படிப்புகளில் அரசு மற்றும் நிர்வாக இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. நீட் நுழைவு தேர்வை 1.53 லட்சம் பேர் எழுதினர். இதில் 89,198 பேர் தேர்வான நிலையில், மருத்துவ படிப்புகளில் சேர 42, 951 பேர் விண்ணப்பித்தனர். அவர்களின் பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் 21ம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் 9,050 எம்பிபிஎஸ், 2200 பிடிஎஸ் இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.