சென்னை ஆக, 11
நடிகர் தனுஷ் அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணமுடைய உடையவர் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் தனுஷ் மீது விதித்துள்ள நிபந்தனைகள் தேவையில்லாதது என கூறிய அவர் தனுஷ் இயக்கிய படம் நன்றாக ஓடிய காரணத்தால் அவருக்கு அழுத்தம் தரப்படுவதை ஏற்க முடியாது என்றார். தயாரிப்பாளர்கள் சங்கம் தனுஷ் படம் நடிப்பதற்கு, பல்வேறு நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.