சென்னை ஆக, 30
வேண்டுவோர்க்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கடவுளாக கருதப்படும் வேழமுத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டடும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் ‘விநாயகர் சதுர்த்தி’ திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.