சென்னை ஆக, 5
திரையுலவை காக்க தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் உள்ளாட்சி கேளிக்கை வரியை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்துக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல்களால் திரைத்துறையே முடங்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறிய அவர், இருதரப்பும் பேசி இதற்கு தீர்வு காண முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.