அமெரிக்கா ஜூலை, 30
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற தெலுங்கானாவில் 41 நாட்கள் ஹோமம் நடத்தப்படும் என சியாமளா கோபாலன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் நல்லா சுரேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கானாவில் 150 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் பள்ளி ஒன்று கட்டப்படும் என்று கூறியுள்ளார். முன்னதாக கமலா அதிபர் வேட்பாளராக வரவேண்டும் என சமீபத்தில் 41 நாட்கள் ஹோமம் நடத்தினார்.