சென்னை ஜூலை, 19
தமிழக சட்டப்பேரவை இதுவரை காலை 10 மணிக்கு தொடங்கப்படுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவை அலுவல் பரிந்துரை குழு நேரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்தது. அதன்படி சட்டப்பேரவை விதிகளில் சபாநாயகர் அப்பாவு திருத்தங்களை செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை இனி காலை 10 மணிக்கு பதிலாக அரை மணி நேரம் முன்னதாக 9:30 மணிக்கு தொடங்கும் எனவும் மதியம் 1:30 மணிக்கு முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.