சென்னை ஜூலை, 13
கோலிவுட் இயக்குனர் சுந்தர் சி நாயகனாகவும், இயக்குனர் பாலிவுட் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்த ஒன் டூ ஒன் படம் விரைவில் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அத்துடன் ஆக்சன் திரில்லர் கலந்த சஸ்பென்சுடன் நகரும் கதைக்களத்திலான படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டி உள்ளது. அனுராக்கிற்கு விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.