ஜிம்பாப்வே ஜூலை, 11
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர். இதுவரை 68 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், முதன் முறையாக ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.