சென்னை ஜூலை, 10
தமிழக சைபர் கிரைம் காவல்துறை எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில் எஸ்பிஐ பெயரிலான போலி செயலியை உண்மையான கூறி அதை பதிவிறக்கம் செய்தால் பரிசு வழங்கப்படும் என மர்ம நபர்கள் செய்தி அனுப்பவதாகவும், அந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவதாகவும் இதுகுறித்து இரண்டு மாதங்களில் 73 புகார் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.