Spread the love

கீழக்கரை ஜூலை, 10

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தினமும் பல முறை மின்வெட்டு நீடிக்கிறது.ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை கூட மின்வெட்டு தொடர்கிறது.

நாளொன்றுக்கு ஐந்து முதல் எட்டு தடவை மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.இதுபோக மாதாந்திர பணிக்காகவும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்வெட்டு தொடர்கிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கும் போது மின்மாற்றிகள் அடிக்கடி பழுதாவதும் சில மின்மாற்றிகள்(டிரான்ஸ்ஃபார்மர்கள்) வெடித்து விடுவதாலும் மின்வெட்டு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

கீழக்கரைக்குள் இருக்கும் பெரும்பாலான மின்மாற்றிகள் பழைய காலத்துடையவை என்றும் மின்கம்பிகள் இத்து போயிருக்கிறது என்றும் இதனை மாற்றி புதிய மின்சாதனங்களை பொருத்தினால் மட்டுமே ஓரளவேனும் தடையில்லா மின்வினியோகம் கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கீழக்கரையில் நீடிக்கும் தொடர் மின்வெட்டு பிரச்சினையை ஆளும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரோ?கூட்டணி தலைவர்களோ? நகர்மன்ற தலைவரோ?துணை தலைவரோ? திமுக கவுன்சிலர்களோ? கண்டு கொள்வதே இல்லையென சமூக ஆர்வலர்களான ஹமீது பைசல்,பாசித் இலியாஸ்,சுல்தான் சிக்கந்தர்,அன்சாரி உள்ளிட்டோர் குற்றம் சாட்டுகின்றனர்.

திமுக ஆட்சியும் மின்வெட்டும் பிரிக்க முடியாதவை என்னும் அடையாளத்தை மாற்ற இனியாவது அதிகாரிகள் முயற்சி செய்வார்களா?

ஜஹாங்கீர் அரூஸி

மாவட்ட நிருபர்

கீழக்கரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *