பாரீஸ் ஜூலை, 9
வரும் 26 ம் தேதி பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர் வீராங்கனைகள் பாரம்பரிய உடையில் அணிவகுக்க உள்ளனர். பெண்கள் புடைவையும் ஆண்கள் பைஜமாவும் அணிந்து பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தியால் நெய்யப்பட்ட இந்த ஆடைகள் சந்தன நிறத்திலும் ஓரங்கள் இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்திலும் ஜொலிக்கும். பட்டன்களின் நீல நிற சக்கரம் இடம் பெற உள்ளது.