நொய்டா ஆக, 28
விதிகளை மீறி நொய்டாவில் 70 கோடியில் கட்டப்பட்ட கட்டிடம் 20 கோடி செலவில் தகர்க்கப்படுகிறது. இரட்டை கோபுர இடிப்பால் 80 ஆயிரம் தான் குப்பைகள் உருவாகும். 3,700 கிலோ வெடி மருந்தை பயன்படுத்தி 9 விநாடிகளில் நீர்வீழ்ச்சி வெடிப்பு தொழில்நுட்பத்தில் இடிக்கப்பட்டது.
மேலும் இரட்டை கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 7.5 லட்சம் சதுர அடி ஆகும். இரட்டை கட்டிடம் இடிக்கப்படுவதை காண டெல்லி மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டனர். இரட்டை கட்டிடம் தகர்ப்பால் எழுந்த தூசு மண்டலம் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவி அருகில் உள்ள இடமெல்லாம் புழுதி மயமானது. தகர்க்கப்பட்டதால் கட்டட இடிபபாடுகளை எடுத்துச் செல்ல மூவாயிரம் லாரிகள் தேவைப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன