தஞ்சாவூர் ஆக, 28
தஞ்சை தூய பேதுரு பள்ளியில் 1976ம் ஆண்டு படித்த மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தனர்.
இவர்கள் ஆண்டுதோறும் தஞ்சையில் ஒன்று கூடி சந்தித்து கொள்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.
தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று தஞ்சையில் ஒன்று கூடி சந்தித்தனர். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவரும் ஓய்வு பெற்ற காவல்துறை தலைவருமான ஸ்ரீதர், ஓய்வு பெற்ற துபாய் விமான நிலைய அதிகாரி மொய்ன்அலி, சென்னை மெட்ரோ வாட்டர் தலைமை பொறியாளர் ரசீத், உயர் கல்வித் துறை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களது பள்ளிக்கால சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். கேக் வெட்டி கொண்டாடினர்.
முடிவில் அனைவரும் ஒன்று சேர்ந்து குரூப் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். மலரும் நினைவுகளாக இவர்கள் அனைவரும் ஒன்று கூடி இருந்தது பார்ப்பதற்கு மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.