சென்னை ஜூன், 5
மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சியை மக்கள் ஆதரிப்பதற்கு இந்த தேர்தலே சாட்சி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கமலஹாசன், முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டக் கூடியவை. இந்தியா வாழ்க தமிழ்நாடு ஓங்குக தமிழ் வெல்க எனக் கூறியுள்ளார்.