சென்னை ஜூன், 3
விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 31 வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக காவல் தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் ஜூலை 31 வரை லேசர் ஒளி, பலூன்கள் உள்ளிட்ட பொருட்கள் எதையும் பறக்க விடக்கூடாது என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.