Spread the love

விருதுநகர் ஜூன், 2

சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு 48 மணி நேரத்தில் அவசர மருத்துவ சிகிக்சை செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம் & நம்மை காக்கும் 48 திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டினர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதுமின்றி தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துக்களில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் சிகிச்சை அளிக்கப்படும்.

சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவினங்களை குறைக்கும் உயிர்காக்கும் உன்னத திட்டத்தில் விபத்து நிகழும் பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61,802 நபர்களுக்கு ரூ.45.87 கோடி செலவில் மருத்துவ சிகிக்சை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *