சென்னை ஜூன், 1
கூட்டுறவு சங்கங்கள் சார்பில் சிந்தாமணி, காமதேனு உள்ளிட்ட வணிக பெயர்களில் 380 மருந்தகங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 20% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. மத்திய அரசு ஜன் அவ்ஷாதி என்ற பிரதமரின் மக்கள் மருந்தகங்களை தொடங்கி வருகிறது. இந்த மருந்தகங்களை தமிழகத்தில் மாவட்டத்திற்கு தலா 20 தொடங்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது. இதற்கான இட வசதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.