சென்னை மே, 23
சென்னையில் காலை 8:30 மணி முதல் 12:30 வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும், பிற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. மதியம் வழங்கப்படும் இடைவெளி நேரத்தில் கடைகளில் முறையீடு நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் ரேஷன் கடையில் மதிய நேரத்தை விரைவில் மாற்ற கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முடிவு செய்துள்ளது.