Spread the love

புதுடெல்லி ஆக, 28

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்திய ஊடக உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஐசிசி – இந்திய ஊடக உரிமத்துக்கான ஏலம், சீல் செய்யப்பட்ட ஏல செயல்முறையில் நடைபெற்றது. ஒரு சுற்று மட்டுமே நடைபெற்ற ஏலத்தில் நான்காவது முறையாக ஐசிசி – இந்திய ஊடக உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைபற்றியுள்ளது.

இதன்மூலம், 2024 முதல் 2027 வரை ஐசிசி நடத்தும் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் போட்டிகள் உட்பட உலகளாவிய நிகழ்வுகளுக்கான இந்திய துணைக் கண்டத்திற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை டிஸ்னி-ஸ்டார் தக்கவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *