அகமதாபாத் ஆக, 27
சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆற்றகரையில் இன்று கதர் உற்சவம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராட்டையில் நூல் நூற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கதர் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 7,500 பெண்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் பங்கேற்றார். 1920களில் இருந்து பயன்படுத்தப்பட்ட பல்வேறு தலை முறைகளை சேர்ந்த 22 ராட்டைகள் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.