சென்னை மே, 20
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு மது போதையில் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வரும் சந்தோஷ் என்பவர் மது போதைக்கு தான் அடிமையாகி விட்டதால் என்னை போன்று வேறு யாரும் குடிக்க அடிமையாகி விடக்கூடாது என்பதால் டாஸ்மாக் கடைகள் மூட முதல்வரிடம் நேரில் வலியுறுத்த வந்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.