சென்னை மே, 19
அரண்மனை 4 திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால் இயக்குனர் சுந்தர் சி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், ரிலீஸ் ஆவதற்கு முன்னர் OTT உரிமையை விற்க அவர் கஷ்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு வாங்க போட்டி போடுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.