புதுடெல்லி மே, 16
2023-24 Q4 காலாண்டில், நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ₹37,599 கோடியை ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாயாக ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 36 ஆயிரத்து 99 கோடியாக இருந்த வருவாய் தற்போது 4.4% உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 31% சரிந்து ₹2,072 கோடியாக உள்ளது.