சென்னை மே, 16
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனது ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ரசிகர்களை சந்திப்பதை ரஜினி வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால் ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் நேரில் கலந்துரையாட ரஜினி திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.