சென்னை மே, 11
அக்ஷய திருதியை ஒட்டி ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1240க்கு உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 160 க்கு விற்பனையானது. தங்கம் விலை அதிகரித்தும் பொதுமக்களிடையே வாங்கும் ஆர்வம் குறையவில்லை. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 16 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4000 கிலோ அதிகமாகும்.