சென்னை மே, 11
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 2ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்வி பயில தகுதியுடையவர் ஆவார்கள். இதற்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும்.