சென்னை மே, 7
தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ள விக்ரம் அதை எடுத்து அருண்குமார் இயக்கம் வீரதீரசூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படம் கன்னடத்தில் ரிஷப் செட்டிஇயக்கத்தில் வெளியான காந்தாரா படத்தைப் போலவே இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை உடலை வருத்தி மாறுபட்ட கெட்டப்பில் நடித்திருக்கிறார் நடிகர் விக்ரம். இந்த படத்தில் இதுவரை தான் நடித்திராத வகையில் படம் முழுக்க அரிவாலும், கையுமாக திரியும் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார்.