மே, 5
கடும் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் மதிய வேலைகளில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பகல் 11 மணி முதல் மூன்று மணி வரை மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக தண்ணீர் அருந்த வேண்டும் வெளியே குடை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.