கர்நாடகா மே, 4
பிரஜ்வால் எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் கைது செய்து அழைத்து வருவோம் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதாக கூறிய அவர் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவரை மத்திய அரசு பாதுகாப்பதாகவும், இவ்விவகாரம் தெரிந்தும் ஜேடிஎஸ், கட்சியுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை தொடர்வதாகவும் குற்றம் சாட்டினார்