சென்னை மே, 3
நடப்பாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்கு முன்பு நீட் தேர்வு நடப்பதால் மாணவர்களின் சங்கடங்கள் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளே நீட் தேர்வு நடக்க இருந்ததால் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில் நடப்பாண்டில் மே 5-ல் நீட் தேர்வும், 6ல் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகிறது.