புதுடெல்லி ஏப்ரல், 30
சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக தேர்வு வரும் ஜூன் 18ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு வரும் ஜூன் 16ம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான UGC-NET தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், NET தேர்வு மாற்றப்பட்டுள்ளது.