ரஷ்யா மே, 1
ரஷ்யா -உக்ரைன் இடையிலான போரை நிறுத்தக்கோரி உலக அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்த சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. ஜூனில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டு வரும் சூழலில், இதனை ஏகாதிபத்திய நாடுகள் நடத்தவுள்ள நாடகம் என ரஷ்ய அதிபர் புடின் விமர்சித்துள்ளார். உலக அமைதிக்கான சுவிஸின் முன் முயற்சி வெற்றி பெற வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.