புதுடெல்லி ஏப்ரல், 30
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று அவரது மனைவி மற்றும் டெல்லி கல்வித்துறை அமைச்சர் ஆதிஷி ஆகியோர் சந்தித்துள்ளனர். முதலில் அனுமதி மறுத்த சிறை நிர்வாகம் பின்னர் அனுமதி அளித்தது. இந்த சந்திப்பில் டெல்லி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும், குடிநீர் வினியோகத்தை மேம்படுத்துமாறும் வலியுறுத்தியதாக ஆதிஷி தெரிவித்தார்.