விருதுநகர் ஏப்ரல், 24
மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் நீதி வழங்குவதே காங்கிரஸின் நோக்கம் என முன்னாள் நிதி அமைச்சர் பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார். விருதுநகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மேலும் ஏதேனும் ஒரு சமூகத்தை திருப்திப்படுத்துவது போல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒரு பத்தியாவது இருப்பதை காட்ட முடியுமா என்று பிரதமர் மோடிக்கும், பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுக்கும் சவால் விடுத்துள்ள சிதம்பரம் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒன்றுமே இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.