ராமநாதபுரம் ஏப்ரல், 23
ராமநாதபுரம் மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா நேற்று முதல் ஜூன் 20 வரை நீண்ட விடுப்பில் செல்வதால் மாவட்ட கல்வி அலுவலர் பிரின் ஆரோக்கியராஜ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக முழு கூடுதல் பொறுப்பில் செயல்படுவார் என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நிதி ஆதாரத்துடன் கூடிய முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.