கீழக்கரை ஏப்ரல், 22
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வீட்டில் மூடையில் பதுக்கி வைத்திருந்த ரூ 50 லட்சம் மதிப்புள்ள 720 கிலோ கடல் அட்டைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக TWINS எனக்கூறப்படும் அசாருதீன்,நசுருதீன் ஆகிய இரட்டையரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கீழக்கரை காவல்துறை துணை ஆய்வாளர் கோட்டைச்சாமி, முத்துச்செல்வம் மற்றும் காவலர் ரமேஷ் ஆகியோர் இன்று கீழக்கரையில் ஒரு வீட்டில் இருந்த மூடைகளை சோதனை செய்தனர். அதில் நன்கு பதப்படுத்திய கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது. கைப்பற்றிய 35 மூடைகளில் தலா 20 கிலோ வீதம் 720 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. ரூ.50 லட்சம் மதிப்பிலான 720 கிலோ கடல் அட்டைகளை கீழக்கரை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் சேகரித்த கடல் அட்டைகளை பதப்படுத்தி இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் வைத்திருக்கலாம்? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக முஹம்மது அசாருதீன், முஹம்மது நஸ்ருதீனை கைது செய்தனர்.
TWINS ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான இந்த இரட்டையர் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் பிடிபட்டுள்ளது கீழக்கரை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்