மதுரை ஏப்ரல், 23
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே ஆற்றில் எழுந்தருளி அருள் பாலித்தார். பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளியதால், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அதிக அளவில் மழை பொழிந்து விவசாயம் செழிப்பது என்பது மக்களின் நம்பிக்கை