சென்னை ஏப்ரல், 22
நாட்டில் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளால் அரசு நிர்வாகம் செயல்பட முடியாமல் மொத்தமாக முடக்கப்படுவதோடு 45 நாட்களுக்கு மேலாக மனிதர்களை பாதிப்புக்கு உள்ளாக்குவது நியாயமற்ற ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.