சேலம் ஏப்ரல், 20
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%, தென் சென்னையில் 54.27%, வாக்குகள் பதிவாகியுள்ளன. வடசென்னை 60.13 %, கோவை 64.81%, சேலம் 78.13 %, நாமக்கல் 78.16 %, மதுரை 61.92% வாக்குகள் பதிவாகியுள்ளன.