தூத்துக்குடி ஏப்ரல், 14
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் மழை பெய்யும். மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மதுரை, தேனி, டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்வதால் வெப்பம் தணிந்துள்ளது.