திருமலை ஏப், 12
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று அங்குள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் இல் உள்ள 29 காம்பார்ட்மெண்டுகளும் கூட்டம் நிரம்பி அரை கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்கு சுமார் 18 மணி நேரம் ஆனது. கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருமலைக்கு வந்ததே காரணமாக கூறப்படுகிறது.