Spread the love

அரியலூர் ஏப்ரல், 11

மயிலாடுதுறையில் சுற்றி வந்த சிறுத்தை தற்போது அரியலூர் மாவட்டத்தில் நுழைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

சமீப காலமாக வன விலங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. அந்த வகையில், மயிலாடுதுறையில் சுற்றி வந்த சிறுத்தை இப்போது அரியலூருக்குள் புகுந்திருக்கிறது. மயிலாடுதுறையில் மலை ஏதும் இல்லை. இப்படி இருக்கும்போது இங்கு சிறுத்தை எப்படி வந்தது? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், கோயம்புத்தூரில் இருந்து வந்துள்ள நிபுணர் குழுவினர், 30 கேமரா டிராப்களுடன் களத்தில் பணியை தொடங்கியுள்ளனர். சிறுத்தை நடமாட்டம் மற்றும் அதன் பயன்பாட்டுப் பகுதியின் அமைப்பை அறிய காலை நேரங்களில் ட்ரோன் கேமராவும், இரவு நேரங்களில் தெர்மல் ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சிறுத்தை நடமாட்டம் குறித்து சமூக வலை தளங்களில் பரப்பப்படும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தது. ஆனால், சிறுத்தை இப்போது மயிலாடுதுறையை விட்டு அரியலூருக்கு இடம் பெயர்ந்திருக்கிறது.

அரியலூர் மாவட்டம் செந்துரை அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறுத்தை சென்றிருப்பது மருத்துவமனை சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியுள்ளது. எனவே கடந்த 10 நாட்களாக போக்கு காட்டி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சிறுத்தை ஒரு நாளைக்கு 50 கி.மீ வரை இயல்பாக நடக்கும் என்பதால், மயிலாடுதுறையிலிருந்து அரியலூருக்கு சென்றிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றும் வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *