Spread the love

கீழக்கரை ஏப்ரல், 9

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சேரான் தெரு நண்பர்கள் இணைந்து ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் ஒருநாள் மட்டும் நோன்பு வைக்கும் மக்களுக்கு சஹர் நேர உணவு விருந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

இவ்வாண்டும் அதே இன்று அதிகாலை சஹருக்கான உணவு விருந்து நடைபெற்றது இதில் 1800 பேருக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டன.சோறு,கோழி குழம்பு, அவித்த முட்டை,தாழிச்சா குழம்பு, தேங்காய்பால் ரசம் என சுவை மிகுந்த உணவினை பரிமாறி அமர்க்களப்படுத்தி விட்டனர்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 800 பேருக்கு உணவு வழங்கி துவக்கப்பட்ட இந்த விருந்தோம்பல் திட்டம் இன்று 1800 பேர் வரை உயர்ந்து நிற்பதற்கு பெரிதும் காரணியாக சேரான் தெரு மக்களும் ஊர் சார்ந்த பிரமுகர்களும் கொடுத்து வரும் பேராதரவு தான்.

இதுபோன்ற நல்லறப்பணிகளில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு நமது வணக்கம் பாரதம் இதழ் சார்பில் வாழ்த்துக்களை உரித்தாக்குவோம்.

ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *