புதுடெல்லி ஏப்ரல், 2
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் மக்கள் யுபிஐ மூலம் ரூ.19. 8 லட்சம் கோடி பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை எடுத்துச் செல்ல விரும்பாதோர் யு பி ஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்கின்றனர். இதே போல் மார்ச்சில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1,344 கோடி பரிவர்த்தனைகள் செய்திருப்பதும், ரூ.19.8 லட்சம் கோடி பரிமாற்றம் செய்திருப்பதும் புள்ளி விபரம் மூலம் தெரிய வருகிறது