திருச்சி மார்ச், 31
திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு மேல் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் செந்தில் நாதன் அமமுகா அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், அண்ணாமலை உள்பட 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லை நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.