சென்னை மார்ச், 31
தவெக தலைவரும், நடிகருமான விஜய் ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது இதையொட்டி, விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க புனிதமான இந்நாளில் அனைவருக்கும் எனது ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.